தனுசுடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதும் நயன்தாரா.! யாருக்கு வெற்றி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடிகையாகவும் வலம் வருபவர் தனுஷ் மற்றும் நயன்தாரா, இவர்கள் இருவரும் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள், இந்த நிலையில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரல் ஆனது, ஏனென்றால் அந்த அளவு மோஷன் போஸ்டர் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றது, இந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் சைட் அடிக்கும் நயன்தாராவை பார்த்து கைதூக்கி கும்பிட செய்துவிட்டீர்கள் எனக் கூறினார்கள்.

இந்நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment