5 முறை நேருக்கு நேராக மோதி கொண்ட தனுஷ் – கார்த்தி.! ரேசில் ஜெயிச்சது யார் தெரியுமா.?

dhanush-and-karthi
dhanush-and-karthi

சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் விருமன். இந்த படம் தற்பொழுதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷும் கார்த்தியும் ஐந்து முறை மோதி உள்ளனர் அதில் யார் எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. குட்டி – ஆயிரத்தில் ஒருவன் : கடந்த 2010 ஆம் ஆண்டு பொங்கல் அன்று தனுஷின் குட்டி கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்தன. கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரலாற்று படம் அந்த படம் 18 கோடி ரூபாய் பொருள் செலவில் உருவானது ஆனால் படம் வெளிவந்து 25 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது குட்டி திரைப்படம் சுமாராக ஓடியது.

2. ஆடுகளம் – சிறுத்தை : சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி என இருந்ததால் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது 13 கோடி ரூபாய் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 30 கோடி வசூல் செய்தது. தனுஷின் ஆடுகளம் திரைப்படம் 10 பத்து கோடி ரூபாய் செலவில் உருவானது ஆனால் வசூலித்தது 30 கோடி. இந்த இரண்டு படங்களும் அப்பொழுது நல்ல வரவேற்பு பெற்று இரண்டுமே சமநிலையில் வசூல் அள்ளியது.

3. கொடி – காஷ்மோரா : 2016 ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் காஷ்மோரா திரைப்படம் அப்பொழுது சுமார் 60 கோடி வசூல் அள்ளியது அதே போல அந்த சமயத்தில் வெளியான தனுஷின் கொடி திரைப்படம் 50 கோடி வசூலித்தது இந்த இரண்டு திரைப்படத்தின் நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க.

4. கர்ணன் – சுல்தான் : கடந்த ஏப்ரல் மாதம் தனுஷின் கர்ணன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று சூப்பராக ஓடியது இந்த திரைப்படம் அப்பொழுது 105 கோடி வசூல் செய்தது ஆனால் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் அதில் பாதி 55 கோடி மட்டுமே வசூல் செய்தது.

5. திருச்சிற்றம்பலம் – விருமன் : சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் திரைப்படம் கிராமத்து கதை என்பதால் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது இந்த படம் பத்து நாட்களில் மட்டுமே 50 கோடி வசூல் செய்துள்ளது ஆனால் தனுஷின்  திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே 40 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.