மாமனாரின் ரொமான்ஸ் பாடலுக்கு தனது மனைவியுடன் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் தனுஷ்.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

அந்த வகையில்  அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கர்ணன் திரைப்படமும் தற்பொழுது வெற்றிநடை போட்டு வருகிறது. இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அனைவரும் இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு தனுஷை தங்களது படங்களில் நடிக்கவைக்க வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் மூன்று வருடங்களுக்கு 9 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்நிலையில் தற்போது தனுஷ் கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என்று இந்திய அளவில் பிரபலம் அடைந்து வருகிறார். அந்த வகையில் ஹோலிவுட்டில் உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் குழுவினர்கள் தயாரித்து வரும் த க்ரே மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் சூட்டின் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக தனுஷ் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.  இந்நிலையில் தனது குடும்பத்தை மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக தனது மனைவி குழந்தைகள் ஆகியோரயும் அழைத்து சென்றுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் கடலுக்கு நடுவில் ஐஸ்வர்யாவை போட்டோ எடுப்பது போல ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலானது .இதனை தொடர்ந்து ரஜினியின் திரை படமான பேட்ட திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இளமை திரும்புதே பாடலுக்கு தனது மனைவியுடன் மிகவும் அழகாக நடனமாடி உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.