விவாகரத்து பெற்ற பின் ஒரே பார்ட்டியில் கலந்துகொண்ட தனுஷ், ஐஸ்வர்யா.?

dhanush-and-aisharya-
dhanush-and-aisharya-

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் காலப்போக்கில் இவர் தற்போது சமூக அக்கரை  மற்றும் ஆக்ஷன் திரைப்படங்களிலேயே பெரிதும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அதுவும் அவருக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுக்க மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டே போகிறது.

இதனால் அவரது சினிமா பயணம் கிடுகிடுவென போய்க்கொண்டிருக்கிறது சொல்லப்போனால் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் இவரது திறமையை பார்த்து வாய்ப்புகள் குவிகின்றன அந்த காரணத்தினால் ஹாலிவுட், பாலிவுட் போன்றவற்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை ருசித்த..

நிலையில் தற்போது தனுஷ் மாறன் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன இப்படி சினிமாவுலகில் சிறப்பாக போய்க் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மட்டும் சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து 18 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் இவர்களது இருவரையும் பேச்சுவார்த்தையின் மூலம் சேர்த்து வைக்கலாம் என ரஜினி எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில்  அண்மையில் பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும்  பேசி கொள்ளவில்லை என கூறப்படுகிறது.