தனுஷ், சூர்யாவின் சொத்து மதிப்பை விட அதிகம் சொத்து சேர்த்து வைத்திருக்கும் நடிகை தமன்னா – எவ்வளவு கோடி தெரியுமா.? பார்த்து அதிர்ச்சியாகும் மற்ற நடிகைகள்.

0

சினிமாவுலகில் ஆள் பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் திறமையையும் வைத்திருந்த நடிகை தமன்னாவுக்கு வெகு விரைவிலேயே முன்னணி நடிகரின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின அந்த வகையில் தமிழில் முன்னணி ஜாம்பாவன்கள்அஜித் விஜய் சூர்யா தனுஷ் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை கர் லெவலில் உயர்த்திக் கொண்டார்.

தமிழை தாண்டி தற்பொழுது மற்ற மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி தனக்கான இடத்தை பிடித்து வருகிறார். இப்படி புகழ் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெப் சீரிஸ் மற்றும் சின்னத்திரை பக்கமும் தலை காட்டத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் சின்னத்திரையில் தற்பொழுது மாஸ்டர் செஃப் என்ற தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியாக இருக்கிறார். இப்படி இருக்க நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு பார்க்கையில் சுமார் 110 கோடி இருக்கும் என தெரிய வருகிறது. இச்செய்தி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் துறை வட்டாரங்கள் பக்கத்தில் இருந்த தகவல் கசிந்துள்ளது.