அப்பா இல்லைன்னு சொல்லிட்டு ரீல்ஸ் செய்து மாட்டிக்கொண்ட தனலட்சுமி.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..

0

தற்பொழுது விஜய் டிவியில் பிக்பாஸ் 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக தனலட்சுமியின் அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தனலட்சுமி தன்னுடைய சிறிய வயதிலிருந்து இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது எனவே சில படங்களிலும் பறை இசை ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி கலந்து கொண்டு தனக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகிறார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஐந்தாவது வாரம் சென்றுள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என பிக்பாஸ் பல மாற்றங்களை செய்துள்ளது.

எனவே தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டை நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரினா ஆகிய நான்கு பேரும் வெளியேறி இருக்கிறார்கள் இவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி உள்ளவர் தான் தனலட்சுமி.

இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் வாரத்திலேயே பலருடனும் இவருக்கு சண்டை ஏற்பட்டது தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலம் மக்களும் அவரை ஆதரவளித்து வந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். இரண்டு படமும் இதுவரையிலும் வெளியாகவில்லை என்றும் ஒரு படத்தின் ப்ரோமோஷன்காக தான் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார்.

dhanalakshmi
dhanalakshmi

அந்த நிகழ்ச்சியை நடத்தியது அவள்தான் காசு இல்லாமலையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவள்தான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி தான் என்னுடைய அம்மா துணி எடுத்தாங்க என்பதையெல்லாம் போய் அவள் சொல்லும் பொழுதெல்லாம் அதனை கேட்க நாராசமாக இருக்கிறது அவளுக்கு அப்பா இருக்கிறார்.

அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி வருகிறார் அவருடன் சேர்ந்த எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார் அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார் அது மட்டும் இல்லாமல் பைனான்ஸ் செய்கிறார். சொல்லப்போனால் அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்தது அவர்கள்தான் அந்த அளவிற்கு பணம் இருக்கிறது. MLM விளம்பரத்தின் மூலம் பலரையும் ஏமாற்றி சம்பாதித்து வருகிறார். செருப்பு மட்டுமே 12 ஆயிரத்துக்கு எடுப்பா அவள் பணம் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்கள் இவ்வாறு தனலட்சுமியின் உண்மையான முகத்தை அனைவருக்கும் தெரிய வைத்திருக்கிறார்கள்.