புடவையில் தனது மகளுடன் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தாமிரபரணி பட நடிகை.! வைரலாகும் புகைப்படங்கள்

0

2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் முதன்முதலாக ஒட்ட நாணயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் முக்தா என்கின்ற பானு, இந்த திரைப்படத்தில் பானுவுடன் இணைந்து பிரியாமணி ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முதலாக 2006ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகிய தாமிரபரணி என்ற திரைப்படத்தில் பானுமதி சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் இவர் நடித்த முதல் திரைப்படம் தான் இது இந்த முதல் திரைப்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெஸ்ட் அறிமுக நடிகை என்ற விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களையும் கவர்ந்து விட்டார், தாமிரபரணி படம் வெளியாகிய புதிதில் பல ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள், பப்ளிமாஸ் தோற்றத்துடன் இருப்பதால் இவரை பலருக்கு பிடித்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரசிகர் மன்றம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் அவருக்கு தாமரபரணி திரைப்படம் அளவிற்கு இந்த திரைப்படம் ஓடாததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது அதனைத்தொடர்ந்து மீண்டும் விட்டதை பிடிக்கலாம் என்று மலையாள திரைப்படத்திலேயே தொடர்ந்து நடித்து வந்தார்.

பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகர்மலை என்ற திரைப்படத்தில் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார், ஆனால் அழகர்மலை திரைப்படமும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. கடைசியாக தமிழில் வாய்மை, பாம்பு சட்டை சகுந்தலாவின் காதலன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு பெரிதாக எந்த திரைப்படமும் ஹிட் கொடுக்காததால் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை இழந்து விட்டார்.

பெரிதாக பட வாய்ப்பு அமையாததால் 2015ஆம் ஆண்டு ரிங்கு டம்மி என்பவரை திருமணம் செய்துகண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், தற்பொழுது இவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் கியாரா, பார்ப்பதற்கு பானு போலவே மிகவும் க்யூட்டாக இருக்கும் கியாராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் இணைந்து ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள், அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அதன் புகைப்படங்கள்.

View this post on Instagram

എന്റെ ഇഷ്ടങ്ങൾ 👩💆‍♀️

A post shared by muktha (@actressmuktha) on