பல வருடங்களுக்கு பின்பு சீரியலில் குதிக்கும் தேவயானி.! இந்தமுறை வேற தொலைக்காட்சி.!

தமிழ் திரையுலகில் சீரியல்கள் மூலம் நடிக்கத் தொடங்கி பின்பு வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகை தான் தேவயானி இவர் கோலங்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

பின்பு பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் இவர் வெள்ளித்திரையில் நடித்த திரைப்படங்கள் பாதிக்கு பாதி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹிட் அடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் மீண்டும் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் Aggabai Sasubai மராத்தியில் உருவான சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து இவர் இந்த சீரியலில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment