பிரமாண்டமாக உருவாக உள்ள தேவர் மகன் 2 திரைப்படத்தை இயக்கபோவது யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் உலக நாயகன் என்று போற்றப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அதுமட்டுமல்லாமல் இவருக்கு  தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

இவர் சமீப காலங்களாக விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இந்நிலையில் 1992ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தை இயக்க மலையாள இயக்குனரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

அதாவது பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர் மகன் இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளியானது.

kamal
kamal

கமலஹாசன் எழுதிய திரைப்படத்தின் கதையை இயக்கியவர் இயக்குனர் பரதன் இந்தப் படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது தேவர்மகன் இரண்டாம் பாகத்தை உருவாக உள்ளதாக தகவல்கள் கசிந்து பரவி வருகின்றது. அதனடிப்படையில் மலையாளத் திரைப்பட இயக்குனரான மகேஷ் நாராயணன் அவர்கள் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் வெளியான மாலிக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment