நடிகை தேவயானி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், தமிழ் ஹிந்தி மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார், அதேபோல் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் தொட்டாசினிங்கி.
அதேபோல் நடிகை தேவயானி அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படம், அதேபோல் அஜித்துடன் நடித்த தொடரும் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
சமீபகாலமாக தேவயானி சின்னத்திரையில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், இந்த நிலையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த தேவயானி, கடைசியாக எழுமின் களவாணி மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு பெரிய மகளா தேவயானிக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


