உலகத்தில் எதையோ தேடும் நடிகர் விஷால்..! இணையத்தில் லீக் ஆன துப்பறிவாளன் 2 போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் துப்பறிவாளன் இந்த திரைப்படத்தில் விஷால் பிரசன்னா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூட உருவாகி இருந்தது.

அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் தான் முதலில் இயக்கி வந்தார் ஆனால் இவ்வாறு இயக்கத்தின் பொழுது இயக்குனருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

பின்னர் விஷால் தானே இந்த திரைப்படத்தை இயக்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்பை ஆரம்பித்தார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அந்த புகைப்படத்தில் நடிகர் விஷால் உலக வரைபடத்தில் அமர்ந்து கொண்டு எதையோ தேடிக் கொண்டு இருப்பது போல் அமைந்துள்ளது.

ஏற்கனவே முதல் பாகத்தில் விஷாலின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லண்டனில் மிகச் சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஜெயபிரகாஷ், கௌதமி, ரகுமான், போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் இந்த இரண்டாம் பாகமும் மாபெரும் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

thupparivalan-2
thupparivalan-2

Leave a Comment