விரைவில் வெளிவரப் போகும் துப்பறிவாளன் 2 திரைப்படம்..! எதிர்பார்ப்பை எகிற விடும் அளவிற்கு அப்டேட்டை வெளியிட்ட விஷால்..!

Detective 2 movie to be released soon: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தவர் தான் நடிகர் விஷால். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு ஹிட்டான திரைப்படத்தை கொடுக்க தற்போது வரை படாத பாடுபட்டு வருகிறார்.

எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என அயராது போராடி வரும் நடிகர் விஷால் தனது மெகா ஹிட் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க முன்வந்தார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது மிஸ்கின் மற்றும் விஷால் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த துப்பறிவாளன் திரைப்படம் தான்.

இவ்வாறு துப்பரிவாளன் 2 திரைப்படத்தின் பட படிப்பானது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் மிஸ்கின் திரைப் படத்தின் பட்ஜெட்டை அதிகரித்ததன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டன.

சுமார் இரண்டு வருடங்களாக துப்பறிவாளன் திரைப்படமானது கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக இந்த திரைப்படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என விஷால் முன்வந்துள்ளார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தற்போது விஷாலே இயக்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக படப்பிடிப்பு  பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட இந்நிலையில் இந்த ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் திரைப்பட படப்பிடிப்பு ஆனது  நடைபெறும் என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக ரசிகர்கள் மீண்டும் துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியாவதான் காரணமாக மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளிவந்தால் இணையத்தில் தான் வெளிவரும் என விஷால் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேச்சு வெளிவந்துள்ளது.

thupparivalan
thupparivalan