என்னதான் கோபம் இருந்தாலும் சரோஜா தேவிக்காக அந்த விஷயத்தில் இறங்கிப்போன எம்ஜிஆர்..! எதற்காக தெரியுமா..?

0
mgr
mgr

தமிழ் சினிமாவில் கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் போற்றப்படும் நடிகை என்றால் அது அபிநயா சரஸ்வதி தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது மட்டுமில்லாமல் பத்மபூஷன் விருதை பெற்றது மட்டுமில்லாமல் நடிகை சரோஜாதேவி பெரும்பாலும் எம்ஜிஆர் உடன் பல திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்..

அந்த வகையில் இவருடைய நடிப்பில் அன்பே வா, படகோட்டி, எங்கள் வீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன் போன்ற பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

அந்த வகையில் இவர்களுடைய நடிப்பில் வெளியான படம் ஒன்றில் இடம்பெற்ற ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலை இன்றும் ரசிகர்கள் மிகவும் விரும்பி கேட்டு வருவது மட்டுமில்லாமல் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சில காலம் பேசாமல் இருந்து வந்தார்களாம்..

அதன் பிறகு தான் எம்ஜிஆர் க்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறு சரோஜாதேவியின் கணவர் இறந்த செய்தி கேட்டவுடன் எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியுடன் பெங்களூருக்கு சென்றுள்ளார் அப்பொழுது அவருக்கு ஆறுதல் தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த மீலா துயரத்தில் இருந்து நீ மீண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இவை எல்லாம் நீங்கள் மறக்க வேண்டும் என்றால் உடனடியாக பொது சேவையில் ஈடுபட வேண்டும் என்ற காரணத்தினால் சரோஜாதேவிக்கு எம்பி பதவி தருமாறு ராஜீவ் காந்தியிடம் எம்ஜிஆர் அவர்கள் சிபாரிசு செய்தார். ஆனால் சரோஜாதேவிக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது  என்றாலும் பரவாயில்லை அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் எம்ஜிஆர் வந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.