திகிலில் மிரட்டும் “டிமான்டி காலனி 2” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Demonte Colony 2 : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ அருள்நிதி.  இவர் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் குறிப்பாக இவர் திரில்லர் மற்றும் பேய் படங்கள் தான் அதிகம் நடித்துள்ளார் அந்த வகையில் டி பிளாக், டைரி, திருவின் குரல், இரவுக்கு ஆயிரம் கண்கள், மௌனகுரு..

டிமான்டி காலனி போன்ற இவருக்கு வெற்றியை பெற்றது கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றது.  அந்த வரிசையில் தற்போது அருள்நிதி டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் மிகப்பெரிய ஒரு பேய் படமாக உருவாகியுள்ளது. படத்தை R. Ajay gnanamuthu இயக்கி வருகிறார்.

படத்தில் அருள்நிதி சேர்ந்து ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், sarjano khalid, அருண் பாண்டியன், அர்ச்சனா,  முத்துக்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக  நடித்துள்ளனர் இந்த படத்திலிருந்து அண்மையில் மேக்கிங் வீடியோ வந்தது. அதுவே பிரம்மாண்டமாக பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படக்குழு விறுவிறுப்பாக படத்தை எடுத்து வருகிறது முதல் பாகத்தை விட இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இன்னும் எதிர வைக்கும் வகையிள் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி பார்ட் 2 படத்திலிருந்து  போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதில்  அருள்நிதி கொடூர பேயாக தெரிகிறார். இதை பார்த்த ரசிகர்கள் டிமான்டி காலனி  விட பார்ட் 2 அனைவரையும் மிரள வைக்கும் எனக் கூறிய கமெண்ட் அடித்து அந்த போஸ்டரை பரப்பி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் டிமான்டி காலனி 2 படத்தின் போஸ்டரை..

Leave a Comment