குடிபோதையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து உதைக்கும் மாடல் அழகி.! காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

சமூக  வலை தளத்தில் ஒரு சிறிய வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லி சாலையில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றை இளம்பெண் ஒருவர் வழிமறித்து ரகளை செய்கிறார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லி சாலையில் ராணுவ வாகனம் வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு இளம் மாடல் அழகி ஒருவர் அந்த வாகனத்தை வழி மறைக்கிறார் அப்பொழுது ராணுவ வாகனத்தின் மீது சாய்ந்துகொண்டு இருந்த இளம்பெண் திடீரென அந்த வாகனத்தை காலால் உதைக்கிறார் அப்பொழுது ஹேண்ட் பேக்கிலிருந்து மது பாட்டில் கீழே விழுந்து உடைகிறது.

அதுமட்டுமில்லாமல் வாகனத்தின் மீது சாய்ந்துகொண்டு போன் பேசுகிறார் அந்த இளம்பெண் அப்பொழுது ராணுவ வீரர் ஹாரன் அடித்தும் அந்த இளம்பெண்ணை நகர சொல்கிறார் ஆனால் காதில் வாங்காத அந்த இளம்பெண் ராணுவத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் பின்னர் ஹெட் லைட்டை எட்டி உதைக்கிறார். மதுபோதையில் இருந்த இளம் பெண்ணின் ரகளை காட்சிகளை அருகில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவு செய்கிறார்கள்.

பின்னர் ஒரு வழியாக அந்த பெண் சாலையை விட்டு நகர்கிறார் உள்ளூர் போலீஸ் அந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபடுத்தினார்கள் விசாரணையில் அந்தப் பெண் இளம் மாடல் அழகி என்றும் தெரியவந்துள்ளது.

மேலும்இளம்பெண் ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version