ரஜினிகாந்த் மிரட்டிய சந்திரமுகி படத்திலிருந்து வெளியான டெலிட் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இப்போதும் ஜொலித்து வருகிறார் சினிமாவுலகில் 40 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் இவர் அண்மையில் கூட அண்ணாத்த படத்தில் நடித்து அசத்தினார். இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

இந்த திரைப்படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து OTT தளத்திலும் வெளியாகியது. கடந்த தீபாவளிக்கு கூட சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாகி அசத்தியது.

ரஜினி அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டாப் இயக்குனர்களுடன் கதை கேட்டு வருகிறார் வெகுவிரைவிலேயே தனது அடுத்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த படத்தை இயக்குனர் பி வாசு தனது ஸ்டைலில் எடுத்திருந்தார்.

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா, வடிவேலு, நாசர், மாளவிகா, பிரபு, ஜோதிகா போன்ற பலர் நடித்து அசத்தி இருந்தனர். படம் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது. அதிலும் குறிப்பாக ரஜினிக்கு இந்த படம் முக்கியமான படமாக அவரது கேரியரில் பார்க்கப்பட்டது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் ஒரு மாஸ் சண்டை காட்சி வரும் அதில்தான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இன்றோடக்சன் ஆவார். இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் ரஜினி இன்றோடக்சன்  ஆகாவே பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டன. அதிலிருந்து ஒரு டெலிட் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment