கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை!!

0

serial actress: இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்துமே முடங்கி உள்ளதால் திரைத்துறையில் இருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டனர். நடிகர், நடிகைகளுக்கு இந்த சமயத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் வேறு தொழிலை தேடியும் சென்றனர்.

அந்த வகையில் தெய்வத்திருமகள் சீரியலில் நடிக்கும் நடிகை சுசித்ரா அவர்கள் பணக்கஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளை அடிக்கும் அளவிற்கு போய்விட்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் பிரகாஷுக்கு அண்ணியாக நடித்த நடிகை தான் சுசித்ரா. இவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் நடிகை சுசித்ரா கார் ஓட்டுநரான மணிகண்டன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இருவருக்கும் வருமானம் இல்லாமல் இருந்தது. எனவே சுசித்ரா மணிகண்டனிடம் அவரது வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வருமாறு கூறியுள்ளார்.

அதனைக் கேட்டு மணிகண்டனும் சொந்த ஊரான கடலூருக்கு சென்று அங்கிருந்த 18 சவரன் நகையும் 50 ஆயிரம் பணத்தையும் திருடி வந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டனின் தாய் மற்றும் தந்தை இருவரும் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் செய்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீஸ் விசாரணை செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். ஆனால் அவர் மனைவியோ தலைமறைவாகி உள்ளதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

thievamagal-serial-actress
thievamagal-serial-actress