மாஸ்டர் படம் திரைஅரங்கில் வெளிவந்தால் நிச்சியம் இது நடக்கும்.! படத்தை பார்த்து விட்டு கூறிய அனிருத்.

aniruth
aniruth

தமிழ்  சினிமாவில்  ஆண்டுதோறும் புதுமுக இயக்குநர்கள் உருவாகி வருவது வழக்கம் அப்படி வந்த இளம் இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் லோகேஷ் கனகராஜ்.  இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களையே இயக்கி வெற்றி கண்டதன் முலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து பயணித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தனர்.

இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யை வைத்து தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இத்திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வெளிவராமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

vijay
vijay

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் ரி ரெக்கார்டிங் செய்தபோது படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார் மேலும் அவர் கூறியது.

மாஸ்டர் படம் செம்மையாக வந்திருக்குது படம் தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல்லா பார்த்து தெறிக்க விடப் போறோம் என கூறி உள்ளார். இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.