ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன் – அப்ப நயன்தாராவுக்கு “ஜவான்” படத்தில் என்னத்தான் வேலை..

0
jawan
jawan

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் வைத்து ஜவான் என்னும் படத்தை மிகப் பிரமாண்ட பொருட் செலவில் எடுத்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ ராணுவ சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒன்று அப்பா, இன்னொன்னு மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இவருடன் இணைந்து தென்னிந்திய டாப் நடிகர் ராணா டகுபதி, நடிகர் சானியா மல்கோத்ரா, ப்ரியா மணி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இடையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகி இப்பொழுது தொடர்ந்து நடைபெற்ற வருகிறது நயன்தாராவும் ஹனிமூனுக்கு போயிட்டு வந்த தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறாராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜவான் படத்தில் ஹாலிவுட் டாப் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார். இவர் ஷாருக்கான்னுக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது ஷாருக்கான் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரம் அதில் அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக  தீபிகா படுகோன் நடிக்கிறார், மகன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளனர்.