தீனா திரைப்படம் இந்த மலையாள திரைப்படத்தின் காப்பியா இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.!

0

தமிழ் திரையுலகில் நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் தல அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் வசூல் ரீதியாக அதிகம் கல்லா கட்டிவிடும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும்.

இவர் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் 10 சதவீத படபிடிப்பு மட்டும் முடியாமல் இருக்கிறது பொதுவாகவே இவரது திரைப்படங்கள் முடிய நிறைய நாட்கள் ஆகும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்த திரைப்படம் தல அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக வெளியாக உள்ளது.

ஆனால் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது இதனை பற்றி தான் ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள் மேலும் தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் தீனா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இந்த திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு தல என ரசிகர்கள் பெயர் வைத்துவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது அதில் மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டில் வெளியான யாதவம் திரைப்படத்தின் காப்பிதான் தீனா திரைப்படம் என தகவல் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த சுரேஷ் கோபி தான் தீனா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ajith90
ajith90

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் பலரும் தல அஜித்தின் திரைப்படம் காப்பியாக இருக்க முடியாது தல அஜித் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் சொந்த கதையாகத்தான் இருக்கும் என கூறி வருகிறார்கள்.