பல லட்சம் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமான வீடு கட்டிய தீனா.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்ளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இதன் மூலம் அறிமுகமாகவும் ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் தீனா.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமான தீனா தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கும் நிலையில் அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய டைமிங் காமெடியினால் அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமான தீனா சில வருடங்களிலேயே சினிமாவில் பிரபலமானார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியினை தொடர்ந்து பிறகு தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் இதன் மூலம் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

deena family
deena family

அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், புகழ் இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் பிரபலமடைந்து இருப்பவர்தான் தீனா. இவர் எப்பொழுதும் டைமிங்க்கு பதில் சொல்லும் மன்னனாக இருந்து வரும் இவர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி படத்தின் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

deena new house
deena new house

இதனை தொடர்ந்து தும்பா, குற்றம் செய்யேல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி, விஜய்யுடன் மாஸ்டர் என அடுத்தடுத்து பிரபல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து படு பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிப்பையும் தாண்டி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் தீனா தற்பொழுது தன்னுடைய புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் போல் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு அடுக்குமாடி வீடு கட்டி உள்ளார். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

deena
deena
deena 1
deena 1

Leave a Comment