இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறந்த உறுப்பினர்களில் ஒருவரான தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் – ரவீந்திர ஜடேஜா பேச்சு

ஐபிஎல் 16 வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. நேற்று இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்  பல பரிட்சை நடத்தின. முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார் தோனி இதனை அடுத்து குஜராத் அணி பேட்டிங் செய்தது ஆரம்பத்தில் இருந்து அதிரடியை காட்டியது. இதன் மூலம் 20 ஓவர்களில் 214 ரன்கள் அடுத்து அசத்தியது.

இலக்கை துரத்த சென்னை அணி முடிவு செய்தது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தான்.. முதல் ஓவரிலையே மழை பெய்தது. இதனால் மேட்ச் நடைபெறுமா நடைபெறாதா என்ற நிலைமை நிலவியது ஆனால் அம்பையர்கள் கடைசியாக 5 ஓவரை குறைத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி என நிர்ணயத்தது.

இதனை அடுத்து களம் கண்ட சென்னை அணி ஆரம்பத்திலேயே விக்கெட் விடாமல் அதிரடி ஆட்டத்தை காட்டியது இருந்தாலும் நூர் அகமது வீசிய ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதன் பிறகு வந்த ரஹானே,  டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் தொடர்ந்து ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது கடைசி ஒரு ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

ரவீந்திர ஜடேஜா 6,4 அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார். வெற்றிக்கு பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா.. எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது இது ஒரு அற்புதமான உணர்வு உண்மையில் இங்கு எனக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது தாமதமான இரவிலும் மழை நிற்கும் வரை ரசிகர்கள் காத்திருந்தனர்.

csk
csk

சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் மோகித் சுலோ பால் அதிகமாக வீசக்கூடியவர் என்பதால் நேரடியாக அடிக்க நினைத்தேன் அப்படி செய்தேன். வெற்றி கிடைத்தது என கூறினார். இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment