குறைந்து கொண்டே போகும் “நானே வருவேன்” படத்தின் வசூல் – 3 நாள் முடிவில் இத்தனை கோடிதானா.?

0
naane varuven
naane varuven

வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் செல்வராகவன் இவர் இதுவரை தனுஷ் உடன் கைகோர்த்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை கொடுத்தார். அதனை தொர்ந்து இவர்கள் இருவரும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நானே வருவேன் படத்தில் இணைந்தனர்.

இந்த படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அப்பா மகன் சென்டிமென்ட் கலந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் நல்ல வசூலை அள்ளிய நானே வருவேன் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் நானே வருவேன் படத்தை தொடர்ந்து அடுத்த நாளில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக நானே வருவேன் படத்தின் வசூல் இரண்டாவது நாள் குறைந்தது மூன்றாவது நாட்களில் இரண்டு படங்களும் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நானே வருவேன் படத்தின் வசூல் குறைந்து கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மூன்றாவது நாள் முடிவில் நானே வருவேன் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் மூன்றாவது நாளில் சுமார் 10 கோடி மட்டும் தான் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன..

தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கவே மக்களும் அதிகம் ஆர்வம் காட்டுவதால் வருகின்ற நாட்களிலும் நானே வருவேன் திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என தெரிய வருகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..