டிசம்பர் பூக்கள் போல் டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 14 திரைப்படங்கள்..!

december month released tamil movie in theater : 2023 கடைசி மாதம் டிசம்பர் என்பதால் இந்த வருடம் வெளியாகாமல் கிடப்பில் கிடந்த பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது, அந்த வகையில் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி, பார்க்கிங், சாலர், அனிமல் என பல திரைப்படங்கள் இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. அப்படி டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கும் முழு திரைப்படங்களின் தகவலை இங்கே காணலாம்.

அனிமல் – ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், ஆகியோர் நடிப்பில் இயக்குனர் சந்திப்பு ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அனிமல் இந்த திரைப்படம் டிசம்பர் 1 தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

அன்னபூரணி- இயக்குனர் நிவேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அன்னபூரணி இந்த திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்துள்ளார் படத்தில் நயன்தாரா பிராமின் பெண்ணாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிராமின் பெண் எப்படி கறி சமைப்பது தன்னுடைய லட்சியத்தை எப்படி அடைவது என்பதுதான் படத்தின் கதை இந்த திரைப்படமும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்க்கிங் – ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் என பல நடித்துள்ள திரைப்படம் தான் பார்க்கிங் இந்த திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கியுள்ளார். அதேபோல் இந்த திரைப்படமும் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

வா வரலாம் வா – ரவிச்சந்தர் எல்ஜி மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் இணைந்த இயக்கியுள்ள திரைப்படம் தான் வா வரலாம் வா அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ், சஞ்சீவி, ரெடின் கிங்ஸ்லி, காயத்ரி ரெமா சிங்கம்புலி, தீபா, வையாபுரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படமும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

காஞ்சூரிங் கண்ணப்பன்  – சதீஷ் ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், வி டிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி,  எள்ளி அவுராம்,  ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது காஞ்சூரிங் கண்ணப்பன் இந்த திரைப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். அதேபோல் இந்த திரைப்படம் டிசம்பர் மாதத்தில் தான் வெளியாக இருக்கிறது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – ராமதாஸ் யாஷிகா ஆனந்த், ஹரிஜா, ரித்விகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார் இந்த திரைப்படமும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

சைரன் – இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கிய திரைப்படம் தான் சைரன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் அதேபோல் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படமும். விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படமும், இயக்குனர் எம் சரவணன் இயக்கத்தில், தர்ஷன் தியாகராஜன், மகிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி ஆகிய நடிப்பில் உருவாகியுள்ள நாடு திரைப்படமும். இயக்குனர் விண்ணில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், அஸ்வின் ரேபா மோனிகா, ஆகிய நடிப்பில் உருவாகியுள்ள அவள் பெயர் ரஜினி. ஆகிய திரைப்படங்களும் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.

ஹாய், நான்னா, சாலர், அலம்பானா என ஒட்டுமொத்தமாக 14 திரைப்படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்