அஜித் படத்தில் அறிமுகமான நடிகைகள்.! அட இந்த முன்னணி நடிகையும் தல படத்தில் தான் அறிமுகமா.?

தமிழ் சினிமாவில் அஜித் திரைப்படத்தில் அறிமுகமான நடிகைகளை பற்றியும் அவர்கள் யார் யார் என்றும் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சுவலட்சுமி: இவர் அஜித் நடிப்பில் வெளியான ஆசை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.

aasai
aasai

பூஜா : இவர் அறிமுகமான முதல் திரைப்படம் கல்லூரி வாசல். இந்தத் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது.

தேவயானி: இவர் ஜோடி சேர்ந்து அறிமுகமான முதல் திரைப்படம் காதல் கோட்டை. இந்தத் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்திற்கு முன்பாகவே மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இது தான் இவருக்கு முதல் ஜோடி சேர்ந்த திரைப்படம்.

kadhal kottai
kadhal kottai

ஜோதிகா: இவர் அறிமுகமான முதல் திரைப்படம் வாலி. இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. மாளவிகா: அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மாளவிகா. இந்தத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது.

unnai thedi
unnai thedi

அஞ்சலா : அஜித் நடிப்பில் வெளியான பகைவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலா. இந்தத் திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளியானது.  பிரியா : இவர் அறிமுகமான திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியான ரெட் என்ற திரைப்படத்தில் தான். இந்தத் திரைப்படம். 2002ஆம் ஆண்டு வெளியானது.

red
red

மானு : இவர் அறிமுகமான முதல் அஜித் திரைப்படம் காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது.  ரிச்சா: இவர் அறிமுகமான முதல் திரைப்படம் உயிரோடு உயிராக. இந்தத் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது.

uyirodu uyiraga
uyirodu uyiraga

சங்கவி: அஜித் நடிப்பில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சங்கவி. இந்தத் திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.

Leave a Comment