மரண குத்து குத்தும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த நிலையில் வெள்ளித் திறையில் முதல் திரைப்படமாக அமைந்தது மெரினா. இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன்.

அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நிலையில், இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் வெளியான டான், டாக்டர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி நஷ்டத்தையும் ஏற்படுத்தி தந்தது.

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது பாடலாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. நேற்று பட குழு அறிவித்தது போல இன்று வெளியான மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மரண குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயனின் நடனம் இதுவரையிலும் எந்த ஒரு திரைப்படத்திலும் ஆடாத ஆட்டத்தை இந்த பாடலில் ஆடி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment