பாக்யராஜ் வீட்டில் ஏற்பட்ட இறப்பு!! சோகத்தில் குடும்பத்தினர்!!!. பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பு.

0

Death at Bhagyaraj’s house !! 1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாக்யராஜ். இவர் பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

 பின்னர் 1984ஆம் ஆண்டு பிரபல நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை பூர்ணிமா1970 முதல் இன்று வரை வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு சரண்யா மற்றும் சாந்தனு என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சாந்தனு மற்றும் சரண்யா இருவருமே திரை உலகிற்கு அறிமுகமானவர்கள். சாந்தனு ஒரு சிறந்த நடிகராகவும், டான்ஸ்ராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாக்கியராஜின் மாமியாரும் நடிகை பூர்ணிமாவின் தாயாருமான சுப்புலக்ஷ்மி ஜெயராம் நேற்று வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.

poornima mother
poornima mother