DD ரிட்டன்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? குதூகலத்தில் சந்தானம்

DD returns : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவரது காமெடிக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ரஜினி, அஜித், சூர்யா, சிம்பு, விஜய், ஆர்யா போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி நாயகனாக திகழ்ந்தவர். சினிமா உலகில் காமெடியனாக ஓடிக்கொண்டிருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற படங்கள் நல்ல வரவேற்பை கண்டன. ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த டகால்டி, பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், ஏஜென்ட் கண்ணாயிரம்..

குளுகுளு, டிக்கிலோனா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியைப் பெற்று தரவில்லை. இந்நிலையில் தற்போது சந்தானம் எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர் கே என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஹாரர் காமெடி படமான டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகின்றன.

படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, லொள்ளு சபா மாறன், பிரதீப் ராவத், விஜயன், மொட்ட ராஜேந்திரன், தீபா ஷங்கர், கூல் சுரேஷ், சாய் தீனா போன்ற பல நடித்து இருக்கின்றனர். இந்த நிலையில்  டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலை அள்ளி உள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலில் 2.8 கோடி வசூலித்து இருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தானத்தின் படம்முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிடி ரிட்டன்ஸ் அடுத்தடுத்து நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

Leave a Comment