குட்டி கதை சொல்லி DD-யை கவர்ந்த சிறுவன்.! வைரலாகும் வீடியோ

தொகுப்பாளர்கள் பலரும் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகின்றார்கள் அவற்றில் யாரும் நிரந்தரமான இடத்தை எவரும் பிடிக்காத நிலையில் பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பவர் டிடி மட்டுமே இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. இவரை பார்க்கவே பலர் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் என்பது அப்பட்டமான உண்மை என்றே சொல்ல வேண்டும்.

ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பார்த்துக் கொண்டிருக்கிற ரசிகர்கள் அதனை விட்டு விலகாமல் இருப்பதற்கு தொகுப்பாளர்கள் திறம்பட தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே ரசிகர்கள் அதனை தொடர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள் அதனை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி ரசிகர்களை விஜய் டிவிக்கும் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

டிடி வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதை பற்றி மட்டுமே யோசிக்க கூடியவர். அதேபோன்று மற்றவர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒரு சிறுவன் டிடி இடம் உங்களை எனக்கு ரொம்ப பிடித்து உள்ளதாகவும் உங்களிடம் போட்டோ எடுக்க விரும்புவதாகவும் கூறி உள்ளார் அதனை ஏற்றுக்கொண்ட டிடி அவர்கள் அந்த பையனை கூப்பிட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டு மட்டுமல்லாமல் வீடியோவையும் எடுத்தது.

தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் டிடி அவர் மேலும் கூறியது அந்த பையன் என் மீது எவ்வளவு அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டார் என்பது எனக்கு புரிகிறது இதைவிட வேறு எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். வீடியோ பார்த்த ரசிகர்கள் டிடியை புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Comment