டிடி வெளியிட்ட புகைப்படம் கண்கலங்கும் ரசிகர்கள்.!

0
dd
dd

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் டிடி, இவர் நீண்ட ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், சமீபத்தில் கூட இவருக்கு 20 ஆண்டுகால தொகுப்பாளினி பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என விழாவும் கொண்டாடப்பட்டது.

இவர் திருமணமாகி இடைப்பட்ட காலத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றவில்லை சிறிது இடைவெளி விட்ட பிறகு, திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்து பெற்றுக்கொண்டு. மீண்டும் தனது தொகுப்பாளினி பணியை துவங்கினார். அதே போல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

டிடி பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் காலில் அடிபட்டவர்கள் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டிக் ஒன்றை வைத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

இதனால் அவர் அடிபட்டு இருக்கலாம் எனக் கருதும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது சோகத்தையும் ஆறுதல் வார்த்தைகளையும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் ஆனந்தக் கண்ணீரில் தவித்து வருகிறார் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

dd
dd