சன் டிவியில் பிரபல சீரியலில் நடித்துள்ள டிடி!! இந்த வயசிலேயே வா.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பலர் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.அந்த வகையில் நீண்ட காலங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தொகுப்பாளினி திவ்யா தர்ஷினி.

இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதனை மிகவும் காமெடியாகவும், சுறுசுறுப்பாகவும் அந்நிகழ்ச்சியை கொண்டு செல்வார். அதுமட்டுமல்லாமல் இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி என்றுதான் கூறவேண்டும். இவரின் ஸ்டைலை பார்த்து பல திரைப்பிரபலங்கள் கூட இவரை பாராட்டி உள்ளார்கள்.

இந்நிலையில் திவ்யதர்ஷினி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பிரபலமடைந்தார்.  இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது இவரும் வெள்ளித்திரையில் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவர் மீது பல சர்ச்சைகள் வெளி வருவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திவ்யதர்ஷினி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம், சின்னத்திரை வெள்ளித்திரை என்று அனைத்திலும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திவ்யதர்ஷினி தொகுப்பாளராக தான் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்று நாம் அனைவரும் நினைத்து வருகிறோம் ஆனால் தொகுப்பாளராக பணியாற்றி அதற்கு முன்பே இவர் சின்னத்திரையிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் சன் டிவியில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த பிரபல சீரியலான செல்வி சீரியலில் மது கேரக்டரில் நடித்துள்ளார். இந்த சீரியல்  ஒளிபரப்பாகும் பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதன் மூலம் தான் இவர் சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.

Leave a Comment