மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவரும் தசரா பட குழு.! என்னமா இருக்கு பாத்தீங்களா.!

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் தசரா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நானி இவரது நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை தந்தார்கள் என்றே கூறலாம். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார் இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து வசூலில் 100 கோடியை தாண்டி விட்டது என்று தகவலும் வெளியானது.

மேலும் இந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியதால் ரசிகர்களும் தற்பொழுது உற்சாகத்தில் இருக்கிறார்கள் தசரா பட குழு படப்பிடிப்பு தளத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஆம் இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

மேலும் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தசரா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறதா என பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.ஒரு சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை தொடர்ந்து சமுத்திரக்கனியின் நடிப்பும் அற்புதமாக இருந்தது அதேபோல்தான் பிரகாஷ்ராஜ் நடிப்பும் மிகவும் இயல்பாகவே இருந்தது எனக் கூறி இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவில் பிரபலங்களுக்கு மேக்கப் போடுவது மற்றும் முக்கியமான சண்டை காட்சிகள் எடுக்கும் பொழுது எடுத்த மேக்கிங் வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version