தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நானி தற்பொழுது தசரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் கடந்த 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் இவர்களைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ரிலீஸ் ஆனதிலிருந்து தற்பொழுது வரையிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
பொதுவாக நானி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அதேபோன்று ஆதரவு தசரா படத்திற்கும் கிடைத்துள்ளது. இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தெலுங்கில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இந்த படம் மேலும் இவருடைய சினிமா கேடியாரியில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் சாணி காகிதம் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த நிலையில் மேலும் தற்பொழுது இவர் நடிகர் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியான தசரா திரைப்படம் ரசிகர்களின் ஆதரவோடு வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் தசரா படம் வெளியான 5 நாட்களில் ரூபாய் 92 கோடியை வசூல் செய்துள்ளதாக பட குழு போஸ்ட் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
Dharani continues to rule the Box Office 💥#Dasara grosses 92+ CRORES WORLDWIDE IN 5 DAYS 🔥
Watch #Dasara in cinemas today 💥
– https://t.co/9H7Xp8jaoG#DhoomDhaamBlockbuster@NameisNani @KeerthyOfficial @Dheekshiths @odela_srikanth @Music_Santhosh @saregamasouth pic.twitter.com/3KJ9eMiTfr— SLV Cinemas (@SLVCinemasOffl) April 4, 2023