தமிழ் புத்தாண்டில் கேரள புடவையில் வாழ்த்துக் கூறி ரசிகர்களை வெரிக்க வெரிக்க பார்க்க வைத்த தர்ஷா குப்தா.! வைரலாகும் புகைப்படம்

இந்திய நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர். 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

இவர் நடித்த முதல் சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.கோயம்புத்தூரில் பிறந்த இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர். படிப்பு வேறாக இருந்தாலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் எனவே 2018 ஆம் ஆண்டு அவளும் நானும் என்ற சீரியலில் மானசா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

dharsha guptha
dharsha guptha

தற்பொழுது இவர் மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் த்ரிஷா குப்தா சமூக வலைத்தளத்திலும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். மேலும் விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

dharsha guptha
dharsha guptha

இந்த நிலையில் தர்ஷா குப்தா எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சமூகவலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைகவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தர்ஷா குப்தா தமிழ் புத்தாண்டில் வாழ்த்தும் விதமாக கேரள புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதை பார்த்த ரசிகர்கள்  கேரளத்து பைங்கிளி என வர்ணித்து வருகிறார்கள்.

dharsha guptha
dharsha guptha

Leave a Comment