தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தமிழ் மக்களுக்கு பல கருத்துள்ள திரைப்படங்களை கொடுத்துள்ளார். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய்பீம் சூரரைப்போற்று போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சூர்யா ரசிகர்கள் நடிகர் சூர்யாவை பெரிய திரையில் காண ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுத்துள்ள இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றாலும் குடும்ப உறுப்பினர்களை கவர்ந்து குடும்பம் குடும்பமாக திரையரங்கில் வந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை சிலர் காண்கின்றனர்.
இந்த படம் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் போல வசூலை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வசூலை ஈட்டி வருகின்றன. அந்த வகையில் இது வரை தமிழகத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஈட்டிய வசூல் விவரங்களை பார்ப்போம்.
தமிழகத்தில் முதல் நாள் 15 கோடியே 45 லட்சம், இரண்டாவது நாள் 13 கோடியே 75 லட்சம் மற்றும் மூன்றாவது நாள் 18 கோடியே 75 லட்சம் என மொத்தமாக எதற்கும் துணிந்தவன் படம் தமிழகத்தில் 47 கோடியே 95 லட்சம் வசூல் செய்திருக்கின்றனர். இந்த படம் பெரிதளவில் திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள் போலதான் தெரிகிறது.