சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட திரைப்படத்திலிருந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் ரஜினி தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வட மாநிலத்தில் நடைபெற்று வந்தது தர்பார் படத்தில் யோகிபாபு, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து ரஜினியின் கெட்டப் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் லீக்கானது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலை மீண்டும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த போட்டோவில் முருகதாஸ் மற்றும் ரஜினி இருக்கிறார்கள். வெளியாகிய இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது.