மும்பை போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினி.! மீண்டும் இணையதளத்தில் லீக் ஆன வீடியோ மற்றும் புகைப்படம்.

0
new stills from Darbar location

darbar : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த பேட்ட  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

darbar
darbar

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்திலிருந்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது, அதேபோல் முதல் கட்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி வைரலானது ரசிகர்களிடம், பாதுகாப்பை மீறி புகைப்படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தார்கள், அதனால் படக்குழுவினர் மேலும் பாதுகாப்பை அதிகரித்தார்கள்.

darbar
darbar

என்னதான் பாதுகாப்பை அதிகரித்தாலும் மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி உள்ளன, இந்த புகைப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் உடையில் இருக்கிறார், இப்படி அடிக்கடி தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆவதால் படக்குழுவை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது. புகைப்படங்களை யார் லீக் செய்தது என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.