விவாகரத்தான அஜித் பட நடிகையின் அம்மா முன்னாடி தர்பார் வில்லன் செய்த செயல்.! பதுக்கி வைத்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை

90 காலகட்டத்தில் பாலிவுட்டில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூஜா பத்ரா, 1993 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் வசந்த் எழுதி இயக்கிய மணிரத்னம் தயாரித்த ஆசை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்,.

அதன் பின்பு இவர் ஒருவன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய சில திரைப்படங்களை மட்டுமே தமிழில் நடித்து இருந்தார், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், தமிழ் பட வாய்ப்பு குறைந்ததும் பாலிவுட் பக்கம் தனது திசையை மாற்றினார், பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிறகு 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சோனு எஸ்  அலுவாலியாவை திருமணம் செய்து கொண்டார், திருமணம் செய்துகொண்ட இவர்கள் 9 வருடங்களாக கலிபோர்னியாவில் வாழ்ந்து வந்தார்கள் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார், இப்படியிருக்க நடிகை பூஜா தன்னுடைய கணவர் நவாப் ஷா தன்னிடம் முதன் முதலில் காதலை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை புகைப்படத்துடன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, சீமராஜா, தர்பர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment