தர்பார் திரைவிமர்சனம்.!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் கொடி கட்டி பறப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் பல வருடங்களாக ரஜினியின் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனால் படத்தில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது, இந்த நிலையில் கடந்த வருடம் பேட்ட திரைப்படம் வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமல்லாமல் ரஜினி அந்த திரைப்படத்தில் முழு எனர்ஜியுடன் களத்தில் இறங்கிய கலக்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் முழு எனர்ஜியுடன் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது, இந்த திரைப்படம் ரஜினிக்கு பெரிய வெற்றியை கொடுத்ததா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கும் அஞ்சாத விரப்பான போலீசாக பல என் கவுண்டர்களை செய்து ரவுடிகளை ஒழித்துக்கட்டி வருகிறார் அப்பொழுது ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கிறது.

ஆனால் மும்பையில் போலீஸ்க்கு யாரும் பயப்படுவதில்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் சார்ஜ் எடுத்த இரண்டே நாட்களில். மும்பையில் உள்ள ரவுடிகள் ட்ரக்ஸ் விற்பவர்கள் பெண்களை கடத்துபவர்கள் என அனைத்து ரவுடிகளையும் பிடித்து சிட்டியையே தனது கண்ட்ரோளுக்கு கொண்டு வருகிறார். இங்குதான் ரஜினிக்கு பெரும் பிரச்சனை வருகிறது.

மும்பையில் ரெய்டில் சிக்கிய பெரிய தொழிலதிபர் மகனும் மாட்டுகிறார், ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி அவனை வெளியே விடாமல் பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் அந்த தொழிலதிபர் தனது பவரை பயன்படுத்தி மகனை வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோ தனது தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொன்றுவிடுகிறார்.

ஆனால் பின்பு தான் தெரிகிறது அவர் தொழிலதிபர் மகன் மட்டுமல்ல மிகப்பெரிய டான் சுனில் ஷெட்டியின் மகன். பின்புதான் படம் சூடு பிடிக்கிறது இருவருக்குமிடையே பெரிய யுத்தம் நடக்கிறது இதுதான் படத்தின் தர்பார்.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு படத்தையும் தனது தோளில் தூக்கி சுமக்கிறார், சூப்பர் ஸ்டாருக்கு வயது ஆகிவிட்டது என்று யாராலும் சொல்ல முடியாத அந்த அளவு முழு எனர்ஜியுடன் நடித்துள்ளார், சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார், மிரட்டலான போலீஸ் நயன்தாராவுடன் காதல் என தனது நடிப்பில் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.

அதுவும் அந்த ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சிகள், ஜிம் ஒர்க்கவுட் காட்சிகள் என அதகளம் செய்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த காட்சிகளை பார்க்கவே ரஜினி ரசிகர்கள் போவார்கள், படத்தின் முதல் பாதி துப்பாக்கியிலிருந்து விரைந்து செல்லும் குண்டு போல் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது.

ஆனால் ரஜினிக்கு தெரியவில்லை அவருக்கு சஸ்பென்ஸாக இருக்கும், நமக்கு அப்படி பெரிதாக சஸ்பென்ஸ் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஒருசில கட்டத்தில் அட சீக்கிரம் பைட் போடுங்கப்பா எனக் கேட்கத் தோன்றுகிறது, அதேபோல் இதுவரை ரஜினி படத்தில் இல்லாத சென்டிமெண்ட் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் தட்டி தூக்குகிறது அதேபோல் நயன்தாராவின் நடிப்,பு நிவேதா தாமஸ் நடிப்பு என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவு தான். மும்பைக்குல்லையே நம்மளை கொண்டு செல்கிறார்கள். அனிருத்தின் பாடல்கள் ஓகே என்றாலும் பின்னணி இசையில் கொஞ்சம் இறைச்சல் தான். ஆக மொத்தத்தில் தர்பார் ரசிகர்களுக்கு பொங்கல் திருவிழா தான்.

தர்பார் = 3 / 5

Leave a Comment