தலைவர் வேற ரகம்.! பட்டைய கிளப்பும் தர்பார் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ.!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தர்பார் இந்த திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு மும்முரமாக இறங்கியுள்ளது.

படத்தின் ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் தர்பார் ரிலீஸ் ஆன உடனே தமிழ்ராக்கர்ஸில் வந்துவிடும் என்ற பயமும் இருக்கிறது தயாரிப்பு நிறுவனத்திடம். ஏனென்றால் முன்னதாக பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாகிய சில மணிநேரத்திலேயே ஆன்லைனில் கசிந்தது.

அதேபோல் தர்பார் திரைப்படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசிய விட்டு விடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது ரசிகர்களிடம்.

மேலும்  தற்போது ஒரு புதிய பெருமாள் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது இந்த புரோமோ வீடியோவில் ரஜினியின் அண்ணாமலை படத்தின் தீம் மியூசிக்கை மெருகேற்றி பயன்படுத்தியுள்ளார்கள். இந்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் தலைவன் வேற ரகம் எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version