சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டை திரைப்படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் படத்தில் ரஜினி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார், இந்த நிலையில் இன்று அனிருத்தின் பிறந்தநாள். அதனால் தர்பார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அணிருத்.
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பிஜிஎம் இசை வருகின்ற ஏழாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
On this special day, very excited to give you all an update!#DarbarMotionPoster with #ThalaivarThemeMusic on Nov 7th 🙂
Thalaivar Superstar @rajinikanth + @ARMurugadoss sir combo gonna be a blast this Pongal ??? @LycaProductions— Anirudh Ravichander (@anirudhofficial) October 16, 2019