தர்பார் படத்தில் இணைந்த ரஜினியின் சிவாஜி பட நடிகை.

0

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார் இந்த திரைப்படம் வருகின்ற 2020 ஜனவரி மாதம் பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்து விட்டார், அதேபோல் சமீபத்தில் கூட மீடியாவுக்கு பேட்டி கொடுத்த ரஜினி தர்பார் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என கூறினார்.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மேலும் பல நட்சத்திரக் கூட்டங்கள் நடித்துள்ளார்கள், இந்த நிலையில் சிவாஜி திரைப்படத்தில் நடித்த ஸ்ரேயா தர்பார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா தர்பார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.