தர்பார் படத்தை பற்றி முதல் முறையாக ரஜினி சொன்ன தகவல்.!

0
darbar rajini
darbar rajini

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார், நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் பெற்று வைரல் ஆனது., மேலும் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தார்கள் அதனால் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் கண்டிப்புடன் இருந்தார் முருகதாஸ்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது மற்ற வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு, இந்த நிலையில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி தர்பார் பற்றி பேசியுள்ளார். பத்திரிகையாளர் ஒருவர் தர்பார் படம் எப்படி வந்துள்ளது என கேட்டுள்ளார் அதற்கு நன்றாக வந்துள்ளது எனவும் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.