தனுஷ்,வெற்றிமாறனின் அடுத்த கூட்டணி இந்த படத்தில் தான்.! வேற லெவல் அப்டேட்.! இது உண்மையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் சமீபகாலமாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அத்தகைய படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றி வருகிறார் தனுஷ். இவர் கடைசியாக நடித்த அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுஷுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தற்பொழுது அசுரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர்.

இவரது படத்தில் தனுஷின் நடிப்பு சற்று மெருகேற்றி காணப்படுகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு தனுஷ்க்கும்,வெற்றிமாறன் அவர்களுக்கும் மிகப்பெரிய ஒரு இணைப்பு உள்ளது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் வடசென்னை 2 படத்தில் இணைவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டணி இணைந்தால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷம் காணப்பட்டு வருகிறது அந்த வகையில் வடசென்னை இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

ஆனால் இதுகுறித்து அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெற்றி மாறன் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் வட சென்னை2 உருவாகும் என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இவரது ரசிகர்கள் இவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment