தளபதியின் பீஸ்ட் படத்தில் டான்சிங் ரோசா.! ரசிகர்களை சுத்தவிட்டு அடிக்கும் இயக்குனர் நெல்சன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் இவர் சமீபத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், அங்கோர்விக்கல், ஆகியோர் பீஸ்ட் படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்று கூறியிருந்தனர்.

தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு நம்பமுடியாத செய்தி பரவிக்கொண்டிருக்கிறது அது என்னவென்றால் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது. டான்சிங் ரோஸ்  என்ற கதாபாத்திரத்தில் சமீர் என்றவர் நடித்துள்ளார். அவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பட வாய்ப்பு குவிந்துள்ளது என்று கூறி வருகிறார்கள்.

dancing rose
dancing rose

அந்த வரிசையில் தளபதியின் பீஸ்ட் படமும் உள்ளதாம். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இவரை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக  கேட்டுள்ளாராம் ஆனால் இந்த ஒரு செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை  ஏனென்றால் பீஸ்ட் படம் தற்போது 50 சதவீதத்திற்கும்  மேலாக படப்பிடிப்பு முடிந்துள்ளது இதன் பிறகு ஒரு நடிகரை பாதியில் நடிக்க வைப்பது என்பது ரொம்பவும் கஷ்டம் அதனால் இந்த ஒரு செய்தி கண்டிப்பாக பொய்யான தகவலாக தான் இருக்கும்.

Leave a Comment