144 தடையிலும் அடங்காமல் மச்சினிச்சியுடன் குத்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத் தருபவர் சாண்டி மாஸ்டர். இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில், கலா மாஸ்டரின் உதவியால் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார். பின்பு நடிகை காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

பின் 2017ம் ஆண்டு இவர் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றினார், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

பின்பு 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார், தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனால் பிரபலங்கள் மற்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள், இதனாலே நடன மாஸ்டர் சாண்டி தனது மச்சினிச்சி உடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.

Leave a Comment