பத்தாவது படிக்கும் பொழுது தண்ணி தெளித்துவிட்ட தாமுவின் அப்பா.! அதன் பிறகு இப்படி தான் முன்னேறினார்.! கண்கலங்க வைக்கும் தருணம்

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் தாமு. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

10வது படித்துக் கொண்டிருக்கும் போது மிமிக்ரி போட்டயில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார் அதன் பிறகு அந்த பரிசை எடுத்துக் கொண்டு தன்னுடைய அப்பாவிடம் காட்டியுள்ளார் அதற்கு தாமுவின் அப்பா உன்னுடைய வாழ்க்கை உன் கையில் என்று கூறிவிட்டு அவருடைய போக்கில் விட்டதாக தாமு அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் தாமு அவர்கள் சிறுவயதில் இருந்து மிமிக்கிரி செய்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார் அப்போது உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திர கலை விழாக்களில் பங்கேற்று இருக்கிறார். அதில் மிமிக்கிரி செய்து முதல் பரிசையும் வென்றார் இந்த போட்டியில் 40 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அந்த 40 போட்டியாளர்களையும் தாண்டி முதல் பரிசை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நடிகர் தாமு அவர்கள் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் பிரபலமான திரைப்படங்கள் அமர்க்களம், ஜெமினி, பாட்ஷா, காதலுக்கு மரியாதை , திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக கில்லியில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்த கதாபாத்திரத்தில் வரும் ரெட்டை ஜடை ஓட்டேரி நரி கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் தாமு அவர்கள் ஏழு ஆண்டுகலாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுடன் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் சினிமா துறையில் மட்டுமல்லாமல் கல்வித்துறையிலும் கடந்த பத்து ஆண்டுகளாக கல்வி சேவைகளை செய்து வருகிறார் இதற்காக இவருக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ராஷ்டிரிய சிக்ஷா கௌரவ் புரஷ்கார், மற்றும் தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருது நடிகர் தாமு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment