சந்தானத்தின் டகால்டி திரைவிமர்சனம்.!

சந்தானம் ஒருகாலத்தில் காமெடியனாக கொடிகட்டி பறந்தார். பின்பு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முடிவெடுத்து ஹீரோவாக நடித்து வந்தார் ஹீரோவாக ஜெயிப்பதற்கு போராடினார். இவருக்கு தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,A1 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து சந்தானத்திற்கு டகால்டி மூலம் வெற்றி கொடுத்தாரா  என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

மும்பையில் டகால்டி வேலை செய்த சந்தானம் தனது பிழைப்பை நடத்தி வருகிறார் அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரரான இருக்கும் சாம்ராட் தனக்கு தோன்றிய பெண் உருவத்தை வரைந்து அந்த பெண்ணை இந்தியாவில் எங்கிருந்தாலும் கொண்டு வந்து தனது ஆசையை தீர்த்துக் கொள்வார்.

அப்படி தான் ஒரு பெண்ணை வரைந்து அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகள் இடம் கொடுக்கிறார். அப்படித்தான் மும்பையில் இருக்கும் டான் ராதாரவியிடம் அந்த புகைப்படம் செல்கிறது. மும்பையில் இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் டகால்டி வேலை செய்து மாட்டிக்கொள்கிறார் அவரைக் கொல்ல ராதாரவி உத்தரவிடுகிறார்.

அப்பொழுது சந்தானம் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து இந்த பெண்ணை எனக்கு தெரியும் ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேன் எனக் கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி அந்த பெண்ணை எப்படியோ தேடிக் கண்டுபிடிக்கிறார் பின்பு அந்த பெண்ணை சொன்னதுபோல் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின்.

வழக்கம்போல் சந்தானம் ஒன்லைன் கவுண்டரில் கிங் என்பதை நிரூபித்துள்ளார். இந்த திரைப்படத்திலும் ஒன்லைன் கவுண்டரில் கலக்குகிறார்.மேலும் கூடுதலாக யோகிபாபு களத்தில் இறங்க படம் அரைமணிநேரம் தூள் கிளப்புகிறார்கள்.பின்பு என்ன காரணம் என்று தெரியவில்லை யோகிபாபு காழட்டிவிட்டு சந்தானம் மட்டும் பெண்ணை தேடி செல்கிறார். ஹீரோயினுக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை சந்தானம் பயன்படுத்திக் கொள்கிறார் அப்படியே அவர் மும்பைக்கு ஹீரோயினை கொண்டு வரும் காட்சிகள் ஓரளவு பரவாயில்லை அதுவும் கதை கேட்கும் காட்சிகள் நம்மளை சிரிக்க வைக்கின்றன.

அதையும் தொடர்ந்து அவரை மும்பை வில்லனிடம் ஒப்படைக்கும் வரை சந்தானம் ஒன் மேன் ஆர்மியாக கில்லி விஜய் ஆகவே மாறிவிட்டார். எப்பொழுது காமெடி வரும் என காத்திருக்க வைக்கிறது சில இடங்களில் அதுவும் ஊரே துரத்தி வந்தாலும் தனியாளாக அடித்து நொறுக்குகிறார். இது கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இருந்தாலும்கிளைமேக்ஸ் வந்ததும் வழக்கமாக காமெடி படங்களில் ஆள்மாறாட்ட கதை கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது.

யோகி பாபு வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் க்ளைமாக்ஸில் ஹீரோயினை திட்டும் காட்சிகள் சிரிப்புக்கு ஃபுல் கேரண்டி. க்ளைமாக்ஸில் அவருக்கு போதை ஊசி போட்டுவிடுவார்கள் அப்பொழுது மக்கு மாதிரி பேசுவார் ஆனால் படம் முழுவதும் போதை ஊசி போடாமல் மக்கு மாதிரி தான் பேசி வருகின்றார்.

வில்லன் கதாபாத்திரமும் அவ்வளவாக ரசிக்கும்படி அமையவில்லை ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக செய்துள்ளார் தீபக்குமார். விஜய் நரேன் இசை அவ்வளவாக எடுபடவில்லை.

சந்தானம் படம் என்றால் நகைச்சுவை இருக்குமென மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்துக் கொள்ளலாம் என தோன்றுகிறது.

மொத்தத்தில் டகால்டி கொடுத்துவிட்டார் சந்தானம்

டகால்டி 2.5/5

Leave a Comment