சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் எக்ஸ்குளூசிவ் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.!

0
darbar
darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைபடம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் லீக் ஆகி படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்தது.

மேலும் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் தான் பணியாற்றிவருகிறார் அவர் டுவிட்டரில் தர்பார் பற்றிய ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டரில் சந்தோஷ் சிவன் ஒரே ஷாட்டில் ரஜினி மற்றும் நயன்தாரா இடம்பெறும் ஒரு பெரிய காட்சி படத்தின் ஹைலைட் என ட்விட் செய்துள்ளார்.