D43 : படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இது தான்.? படத்தில் விறுவிறுப்பு, திகில் நிறைய இருக்கும் போல..

தமிழ் திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் வசூலை குறிவைத்து படங்களை எடுக்கின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனுஷ் வசூலை தாண்டி படத்தின் விமர்சனம் மற்றும் அவரது நடிப்பு பேச வேண்டும் என்பதற்காக அது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அது அவருக்கு கை கொடுத்துள்ளது.

இதனால் நடிகர் தனுஷ் திரையுலகில் நம்பர் ஒன்னாக இருக்கும் ரஜினியின் இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்பொழுது முன்புறமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சமீபத்திய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை மென்மேலும் அவருக்குக் பேரையும் புகழையும் சம்பாதித்து கொடுத்துள்ளது.

இப்படி இருக்க அடுத்ததாக D43 என்ற திரைப்படத்தில் தனுஷ் கமிட்டாகி நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் என்பவர் எடுத்து வருகிறார். இந்தப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிவடைந்து உள்ளது அதில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கூடுதல் பலம் சேர்க்கிறார்.

இந்தப்படம் எப்படிப்பட்ட கதை என்பது பலருக்கும் தெரியாது ஆனால் அது பற்றிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு கொலையின் பின்னணியில் விசாரிக்கவும் பத்திரிக்கையாளராக வருகிறார்.

ஒரு கொலையின் உண்மை தன்மையை வெளிக்கொண்டுவர தனுஷ் எடுக்கும் போராட்டமே இந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது இதில் ஆக்ஷன் திரில்லர் கலந்த எடுக்க உள்ளதால் படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என பார்க்கப்படுகிறது நிச்சயம் இந்த திரைப்படம் தனுஷ் கேரியரில் மிகப்பெரிய ஒரு படமாக இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜூன் 18-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட இருக்கிறது.

Leave a Comment